உடல் உறவுக்கு அழைத்து காதலனை கொன்ற காதலிக்கு 12 ஆண்டு சிறை!!

ஜெர்மனி நாட்டில் உடல் உறவுக்கு அழைத்து காதலனின் கழுத்தை அறுத்து கொலை செய்த காதலிக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

காதலர்கள் இருவரும் ஒரே குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. காதலனின் தொல்லையை தாங்க முடியாத காதலி அவரை கொலை செய்ய திட்டமிட்டார்.

இந்த திட்டத்தின்படி காதலைனை உடலுறவுக்கு வருமாறு அழைத்து கட்டிலுக்கு அழைத்தாள். காதலனின் சம்மதத்துடன் அவனை கட்டிலில் கட்டிப்போட்டு மரம் அறுக்கும் இரும்பு ரம்பத்தை கொண்டு காதலனின் கழுத்தை கரகர என அறுத்தார்.

இதில் காதலன் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் இறந்தான். காதலி கைது செய்யப்பட்டு அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் 12 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியுள்ளது.

You may have missed