காத்மண்டு

நேபாள நாட்டில் பசுவைக் கொன்றவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடு நேபாளம்.  இந்த நாட்டில் இந்துக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.    இங்கும் பசு புனிதமாக கருதப்படுகிறது.   சென்ற 2015ஆம் ஆண்டு நேபாளத்தில் பசு தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது.   அன்று முதல் அந்நாட்டில் பசுவதை தடுப்பு சட்டம் அமுலில் இருக்கிறது.

இந்நாட்டில் வசித்து வருபவர் யாம் பகதூர் காத்ரி.   இவரது அண்டை வீட்டுக்காரரான பல்தேவ் பட் என்பவர் இவர் மீது காவல்துறையிடம் புகார் அளித்தார்.  அந்த புகாரில் யாம் பகதூர் காத்ரி மூன்று பசுக்களை கொன்றதாக கூறப்பட்டிருந்தது.   இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராம்சந்தர் படேல்  இன்று தீர்ப்பளித்தார்.

நீதிபதி தனது தீர்ப்பில் யாம் பகதூர் காத்ரி பசுக்களைக் கொன்றது நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.