லோக்சபா தேர்தலில் 120 எம்.பி.க்களுக்கு மீண்டும் சீட் கிடையாது….பாஜக அதிரடி முடிவு

டில்லி:

2019ம் ஆண்டு நடக்கும் லோக்சபா தேர்தலில் 18 மத்திய அமைச்சர்கள் உள்பட 120 பாஜக எம்.பி.க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் தொடர்பாக நடந்த அந்த கட்சியின் உயர்மட்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 120 எம்.பி.க்களில் 75 வயதை கடந்த மூத்த எம்பி.க்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். தற்போது பாஜக.வுக்கு 273 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் 43 சதவீதம் பேருக்கு மீண்டும் வாய்ப்பு கிடையாது என்று தகவல் வெளியாகியுள்ளது.

எம்.பி.க்களின் செயல்பாட்டை பல்வேறு அமைப்புகள் மூலம் பாஜக சேகரித்து வைத்துள்ளது. ஆர்எஸ்எஸ் தொண்டர்கள், கட்சி தொண்டர்கள், பிரதமர் மோடிக்கு பல வழிகளில் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நமோ செயலி மற்றும் தனியார் முகமைகள் மூலம் சர்வே எடுக்கப்பட்டது. அதோடு புது முகங்களை வேட்பாளர்களாக களம் இறக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் 18 எம்.பி.க்கள், பீகாரில் 2 பேரும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படாதோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதேபோல் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், கர்நாடகாவிலும் பட்டியல் உள்ளது. 75 வயதை கடந்தவர்கள் 19 பேர் இந்த பட்டியலில் உள்ளனர். இதில் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றவர் குறிப்பிட தகுந்தவர்கள்.

கார்ட்டூன் கேலரி