டில்லி

சுமார் 1200 ஐஐடி போன்ற கல்வி நிலையங்களில் பட்டம் பெற்றவர்கள் கிராமப்புற பொறியியல் கல்லூரியில் பணிபுரிவார்கள் என மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள பின் தங்கிய மாநிலம் மற்றும் மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரியில் பணி புரிய ஆசிரியர்க்ள் முன் வருவதில்லை.   அதனால் இந்த இடங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாகவே உள்ளது.   தவிர இத்தகைய கல்லூரிகளில் பயின்ற மாணவர்கள் மற்ற கல்வி நிலையங்களில் பயின்ற மாணவர்களுடன் போட்டியிடும் அளவுக்கு கல்வித் தரம் இல்லாமல் உள்ளனர்

இதையொட்டி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்  பிரகாஷ் ஜாவ்டேகர் ஒரு புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்.   அவர், “நாட்டிலுள்ள தலை சிறந்த கல்வி நிறுவனங்கள் என அறியப்படும் ஐஐடி,  என் ஐ டி போன்ற கல்வி நிறுவனங்களில் பணி புரியும் பல மாணவர்கள் பின் தங்கிய மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் ஆசிரியராக பணி புரிந்து நாட்டை முன்னேற்ற தயாராக உள்ளனர்.   அவர்களில் சுமார் 1200 பேர் தற்போது ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இனி பின் தங்கிய மற்றும் கிராமப் புற பொறியியல் கல்லூரியில் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.   இது போன்ற பகுதிகளில் மொத்தம் 53 அரசு பொறியியல் கல்லூரிகளில் அவர்கள் பணிபுரிந்து சுமார் ஒரு லட்சம் மாணவர்களுக்கு வழிகாட்டியாக அமைவார்கள்.   இவர்களுக்கு ரூ. 70000 மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது.  இதனால் அரசுக்கு வருடத்துக்கு ரூ. 375 கோடி வரை செலவாகும் என கணக்கிடப் பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.

இவர்களில் 301 பேர் ராஜஸ்தான், 210 பேர் பீகார், 194 பேர் மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பணி புரிவார்கள் எனவும், மீதமுள்ளோர் அசாம், ஜம்மு காஷ்மீர், ஒரிசா, திரிபுரா, உத்திரப் பிரதேசம், உத்தர் காண்ட், மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பணி புரிவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.