ராய்பூர்:

சட்டீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங். இவரது மகன் அபிஷேக் சிங். எம்.பி. இவரது மனைவி ஐஸ்வர்யா. இவர் ராய்பூர் பீமாராவ் அம்பேத்கர் நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டாவது தளத்தில் உள்ள 2 அறைகளில் ஐஸ்வர்யாவும், அவரது குடும்பத்தினரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மற்ற அறைகள் முதல்வர் குடும்பத்தின் பாதுகாப்பு பணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யாவுக்கு விவிஐபி சிகிச்சை அளிக்கும் வகையில் அந்த தளத்தில் இருந்த ஆயிரத்து 200 நோயாளிகளும் வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இட நெருக்கடி காரணமாக இரண்டு கர்ப்பிணிகள் ஒரே படுக்கையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மருத்துவமனையில் ஏற்கனவே போதுமான படுக்கை வசதிகள் இல்லை.

கடந்த ஆகஸ்டில் இங்கு 4 குழந்தைகள் ஆக்சிஜன் இல்லாமல் இறந்தனர். மருத்துவமனையில் மொத்தம் 700 படுக்கைகள் மட்டுமே உள்ளது. ஆனால் உள்நோயாளிகளாக ஆயிரத்து 200 பேர் அனுமதி க்கப்பட்டள்ளனர்.

‘‘மருத்துவமனையில் இட நெருக்கடி இருப்பது உண்மைதான். புதிய கட்டடங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. பிரசவ வார்டில் சில பிரச்னைகள் உள்ளது. மேலும், 30 பேருக்கு தேவையான வசதிகள் இங்கு செய்யப்பட்டு வருகிறது’’ என்று மருத்துவமனை கண்காணிப்பாளர் விவேக் சவுத்ரி தெரிவித்தார்.

முதல்வர் மருமகளுக்கு அரசு மருத்துவமனையில் விவிஐபி சிகிச்சை அளிப்பதற்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால், இத்தகைய சிகிச்சை முறைகள் எதுவும் அளிக்கப்படவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தள்ளது.

செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ‘‘அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற முதல்வர் முடிவு செய்தது பெருமையான விஷயம். சட்டீஸ்கரில் நக்சல்கள் பிரச்னை உள்ளது. அதனால் முதல்வர் இசட் பிளஸ் பாதுகாப்பு வளையத்தில் உள்ளார். மாநிலத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் 24 மணி நேரமும் பணியாற்றி வருகிறார். அதனால் முதல்வர் குடும்பத்துக்கு பாதுகாப்பு உறுதிபடுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது’’ என்றார்.

 

https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fpatrikai.com%2Fchattisgarh-cm-daughter-in-law-delivered-a-girl-baby-in-govt-hospital%2F&h=ATND-gc9WRlApif-EkQ_XyoHGADhHdMF8shC2P-28gnzFuxpLXf5kW8Di-ZyrDD0WtttHWmwVpDNUJUw1pDklXr0kl18qPCOTMKNFZ1WWGEIxn83gFH6GG3zCUTYDiAWc7LeHvYlWlbT