மும்பை: மாநிலத்தில் இன்று(மே 19) ஒருநாளில் மட்டும் சாதனை அளவாக மொத்தம் 1202 கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பினர் என்று கூறியுள்ளார் மராட்டிய மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோப் கூறியுள்ளார்.
மராட்டிய மாநிலத்தில் கொரோனா நோயிலிருந்து குணமடையும் விகிதம் 25% க்கும் அதிகமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தொடக்கத்தில் கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளிகளுக்கான படுக்கை வசதிகளுக்குப் பற்றாக்குறை இருந்தது. ஆனால், தற்போது நாங்கள் தயாராகிவிட்டோம்.
பல்வேறு நிலைகளிலுள்ள கொரோனா நோயாளிகளுக்காக 15000 படுக்கைகளும், தீவிர சிகிச்சைப் பிரிவுக்காக 2000 படுக்கைகளும் தயாராக உள்ளன. தேசிய விளையாட்டு கிளப் மற்றும் எம்எம்ஆர்டிஏ மைதானம் ஆகியவற்றில் தேவையான ஏற்பாடுகளை செய்த பிறகு, இந்தப் படுக்கை வசதிகள் கிடைக்கப்பெற்றன” என்றார் அமைச்சர் ராஜேஷ் தோப்.
இந்தியளவில், மிக அதிக கொரோனா நோயாளிகளைக் கொண்ட மாநிலமாக மராட்டியமும், அதிக பாதிக்கப்பட்டோரைக் கொண்ட நகரமாக மும்பையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.