இன்று 121 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 2057 ஆக உயர்வு…

சென்னை:
மிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  இன்று திடீரென உயர்ந்துள்ளது. இன்று மட்டும்  புதிதாக 121 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில்,  சென்னையில் மட்டும் 103 பேர் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இன்று ஒருவர் பலியான நிலையில்,  பலி எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது.
இன்று கொரோனா பாதிக்கப்பட்டுள்ள 212 பேரில் சென்னையில் மட்டும் 103 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 12 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருவரும், நாமக்கல் மாவட்டத்தில் 2 பேரும், கள்ளக்குறிச்சியில் 3 பேருக்கும் உறுதியாகி உள்ளதாக  தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.