ஒரே நாளில் 1,24,540 பேர் பாதிப்பு: அமெரிக்காவில் புதிய உச்சத்தில் கொரோனா பரவல்…

வாஷிங்டன்: உலகின் பல நாடுகளில் கொரோனா தொற்று பரவலின் 2வது அலை வீசத்தொடங்கி உள்ள நிலையில், அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 1,24,540 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். புதிய உச்சத்தில் அமெரிக்காவில் கொரோனா பரவல் தொடர்வது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் தற்போது கொரோனா 2-வது கட்ட  அலை பரவி வருகிறது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் மீண்டும் தனது கோர முகத்தை காட்டி வருகறது. இது மட்டுமின்றி, இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியா உள்பட   8 ஐரோப்பிய நாடுகளில் பரவியுள்ளது. அதே நேரத்தில் கொரோனாதொற்று பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசிகளும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும  8,60,75,495 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 18 லட்சத்து 59 ஆயிரத்து 645 பேர் உயிரிழந்துள்ளனர். அதுபோல, இதுவரை 6,09,88,703 பேர் குணமடைந்துள்ளனர்.  தற்போதைய நிலையில்,  2,32,27,147 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், அமெரிக்காவில்,   புதிய உச்சமாக 1 லட்சத்து 25 ஆயிரத்து 544 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.  அதிகபட்சமாக, அலபாமா, கலிபோர்னியா, ஜார்ஜியா, உள்ளிட்ட ஆறு மாகாணங்களில் மட்டும் அதிக அளவில் பாதிப்பு  ஏற்பட்டுள்ளது.   கடந்த 8 வாரங்களாக 1 கோடியாக இருந்த கொரோனா தொற்று எண்ணிக்க்கை  ஜனவரி 1ம் தேதியில் 2 கோடியாக அதிகரித்திருந்தது. தற்போது மேலும உயர்ந்து வருகிறது.

அமெரிக்காவில் தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  2,13,38,777  ஆக உயர்நதுள்ளது.

You may have missed