125 கோடி இந்தியர்கள் தான் எனக்கு கடவுள்!! மோடி  உருக்கம்

ஆமதாபாத்:

‘‘125 கோடி இந்தியர்கள் தான் எனக்கு கடவுள்’’ என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.


குஜராத் சுரேந்திர நகரில் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில்,‘‘ இந்திய திருநாட்டின் நன்மைக்கு காங்கிரஸ் பெரும் பணியை செய்யவில்லை. அவர்களது கட்சிக்குள்ளேயே ஜனநாயகம் இல்லை. அப்படி இருக்கும் போது இந்த நாட்டை காங்கிரசார் எப்படி வழிநடத்த முடியும்?.

நாட்டின் வளர்ச்சி தான் எங்களது குறிக்கோள். குஜராத்தை மேலும் உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்வோம். 125 கோடி இந்தியர்களே எனது கடவுள். அவர்களுக்கு சேவை செய்வதே எனது பணி’’ என்றார்.