கொழும்பு:

இலங்கையில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இது வரை 126 பேர் இறந்துள்ளனர். மேலும் 5 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.

பருவ நிலை காரணமாக இலங்கையில் கடந்த சில தினங்களுக்கு முன் பலத்த மழை பெய்தது. தொடர் மழை காரணமாக அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதோடு ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட் டுள்ளது. வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி இது வரை 126 பேர் இறந்துள்ளனர். மேலும் 5 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்னர். அதோடு 97 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணியில் ராணுவ பட குகளும், ஹெலிகாப்டர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

கடந்த 2003ம் ஆண்டிற்கு பிறகு தற்போது தான் இதுபோன்ற ஒரு கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட் டுள்ளது. அப்போது ஏற்பட்ட தென்மேற்கு பருவ மாற்றத்தால் 10 ஆயிரம் பேர் வீடுகளை இழந்தனர். 250 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் தெற்கு பகுதியில் இடம் பெயர்ந்தவர்ளுக்காக 185 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மீட்பு பணியில் ஈடுபட்டுளள ராணுவ தளபதி சுதந்தா ரனசிங்கே கூறுகையில், ‘‘ ராணுவ வீரர்கள் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளையும் சென்றடைந்துவிட்டனர். அதனால் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்பு இல்லை. தற்போது உணவு, குடிநீர், சுகாதாரம் போன்ற பணிகளில் கவனம் செலுத்தப்படுகிறது. ’’ என்று தெரிவித்தார்.

இந்த இயற்கை பேரிடர் காரணமாக தென்கிழக்கு மாவட்டத்தில் கலுத்தரா அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு மட்டும் 5 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். இலங்கையில் பேரிடர் மேலாண்மை மையம் சார்பில் கெலானி ஆற்றங்கரை ஓரத்தில் வசிப்பவர்கள் வெளியேறுமாறு எ ச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகரை கடந்து செல்லும் இந்த ஆற்றின் கரைகள் எப்போது வேண்டுமானாலும் உடைத்துக் கொள்ளும் நிலையில் இருப்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து கப்பல் படைக்கு சொந்தமான ஒரு கப்பலில் மருந்துகள், மருத்துவ குழுவினருடன் இலங்கை விரைந்துள்ளது. மேலும், இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் தொடர்ந்து இலங்கையின் வெள்ள பாதிப்புகளை கண்காணித்து வருகிறது. பேரிடர் மேலாண்மை அமைச்சக ஆலோசனையுடன் எவ்வித உதவிக்கும் தயாராக இருப்பதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.