டில்லியில் 128 பள்ளிகளில் கல்வி கட்டண உயர்வு வாபஸ்….அரசு உத்தரவை ஏற்று நடவடிக்கை

டில்லி:

டில்லியில் 128 பள்ளிகள் தங்களது கல்வி கட்டண உயர்வை திரும்ப பெற்றுள்ளது என்று ஆம்ஆத்மி அரசு தெரிவித்துள்ளது. மேலும், குறைக்க மறுத்த 67 பள்ளிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

பள்ளி கட்டண உயர்வை திரும்ப பெற்ற பள்ளிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள டில்லி கல்வி அமைச்சர் மனிஷ் திட்டமிட்டுள்ளார். மொத்தம் 195 பள்ளிகளின் கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரி டில்லி கல்வி துறை நோட்டீஸ் அனுப்பியது.

இதில் 2 லட்சம் மாணவ மாணவிகள் பயிலும் 128 பள்ளிகள் கல்வி கட்டண உயர்வை திரும்ப பெற்றுள்ளது. மின்சாரம், தண்ணீர் கட்டண அதிகரிப்பு காரணமாக ஆண்டுதோறும் கல்வி கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம் என்று பள்ளி முதல்வர் ஒருவர் தெரிவித்துள்ளார்.