12ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையில் திடீர் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: 12ம் வகுப்பு பொதுத் தேர்வின் அட்டவணையில் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசின் உத்தரவின்படி மே 3ம் தேதி நடைபெற இருந்த முதலாவது (மொழிப்பாடம்) தேர்வு மே 31ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இது குறித்து தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது:

2020-2021ஆம் கல்வியாண்டில், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 3 முதல் 21 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்சமயம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2-ல் நடைபெறுவதால், மே 3 நடைபெறுவதாக இருந்த மொழிப்பாடத்தேர்வு மட்டும் மே 31ஆம் தேதி நடைபெறும். இதர தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளிலேயே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.