சென்னை

ரும் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை 12ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்புத் தேர்வு நடந்தது.  இதை பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்கள் என 7,99,717 பேர்  எழுதினர்.  இதில் பள்ளி மாணவர்கள் 7,79,931 பேர் ஆவார்கள், இவர்களில் மாணவியர் 4,24,285 பேர் ஆவார்கள்.  இந்த மாணவர்களில் பொதுப் பிரிவில் 7,28,516 பேர் மற்றும் தொழிற்பாட பிரிவில் 51,415 பேர் தேர்வு எழுதினார்கள்

கடந்த 15 ஆம் தேதி அன்று இந்த தேர்வுகளுக்கான முடிவுகளை அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டது.  தேர்வில் மாணவிகள் 98.4% மற்றும் மாணவர்கள் 89.41% தேர்ச்சி பெற்றனர்.  மொத்த தேர்ச்சி விகிதம் 92.3% ஆக இருந்தது.  இந்த ஆண்டும் மாணவியர் மாணவர்களை விட அதிகம் பேர் தேர்ச்சி பெற்றனர்.  இந்த தேர்வில் திருப்பூர் மாவட்டம் 97.12% தேர்ச்சியுடன் முதல் இடத்திலும், ஈரோடு மாவட்டம் 96.99% உடன் இரண்டாம் இடத்திலும் கோவை மாவட்டம் 96.39% உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

மாணவர்கள் மறுகூட்டலுக்கு ஜூலை 24 முதல் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கபட்டுளது  இதற்கு தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.   தனித் தேர்வர்கள் தேர்வு மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.     இதற்குக் கட்டணமாக உயிரியல் பாடத்துக்கு ரூ.305 மற்ற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும்  ரூ.205 செலுத்த வேண்டும்.  மாணவர்கள் தங்கள் விடைத்தாள் நகலைப் பெற ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.275 கட்டணம் செலுத்த வேண்டும்.