ஜெனிவா: உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10.87 கோடியாகவும், உயிரிழப்பு 2,39 கோடியாகவும்  உயர்ந்துள்ளது.

உலக நாடுகளை புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸ் ஓராண்டை கடந்தும் தொடர்ந்து வருகிறது.  கொரோனா பரவரை தடுக்கும் வகையில் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையிலும், தொற்று பரவல்,  இன்றளவும் முடிவுக்கு வராத நிலையே தொடர்கிறது. தொற்று பாதிப்பு என்று ஒழியுமோ என்ற  ஏக்கமே மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் தொற்று பாதிப்பு 10,87,24,000 ஆக உயர்ந்துள்ளது. அதே வேகையில் தொற்று  பாதிப்பில் இருந்து குணமடைந்து வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.  இதுவரை  80,730,720 பேர் குணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் இதுவரை 2,393,974 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதைய நிலையில், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு 25,446,831  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள்ல்  99,809 பேர் பேர் கவலைக்கிடமான நிலையில்  உள்ளனர்.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.