13/09/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் மேலும் 5,693 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இன்று ஒரே நாளில் 74 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா  பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 5,02,759 ஆக அதிகரித்து உள்ளது.   உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,381 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 5,717 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், கொரோனாவால் பாதிக்கப் பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,47,366 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது வரை 47,012 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகபட்சமாக சென்னையில், இன்று ஒரே நாளில் 994 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி யுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,48,585 ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் இன்று மட்டும் 82,387 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 57,01,399 ஆக இருக்கின்றது.

தமிழகத்தில் இன்று மட்டும் 74 பேர் உயிரிழந்தனர். 39 பேர் தனியார் மருத்துவமனையிலும், 35 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,381ஆக அதிகரித்துள்ளது.

“வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,693 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 3,410 பேர் ஆண்கள், 2,283 பேர் பெண்கள். 168

சென்னையில் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 584 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் 22,156 பேருக்கும், திண்டுக்கல்லில் 7,863 பேருக்கும் திருநெல்வேலியில் 11,131 பேருக்கும், ஈரோட்டில் 4,534 திருச்சியில் 8,846 பேருக்கும், நாமக்கல் 3,344 மற்றும் ராணிப்பேட்டை 12,093, செங்கல்பட்டு 30,366, மதுரை 15,310, கரூர் 2,161, தேனி 13,775 மற்றும் திருவள்ளூரில் 28,325 பேருக்கு, தூத்துக்குடியில் 12,300 விழுப்புரத்தில் 9,441 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 3,174 பேருக்கும், திருவண்ணாமலையில் 13,071, தருமபுரியில் 2,029 பேருக்கும, திருப்பூரில் 4,748, கடலூர் 16,275, மற்றும் சேலத்தில் 14,475, திருவாரூரில் 5,267 நாகப்பட்டினம் 4,075, திருப்பத்தூர் 3,701, கன்னியாகுமரியில் 10,958 மற்றும் காஞ்சிபுரத்தில் 19,425 பேருக்கும், சிவகங்கை 4,521 மற்றும் வேலூரில் 12,629 பேருக்கும், நீலகிரியில் 2,349 பேருக்கும், தென்காசி 6,260, கள்ளக்குறிச்சியில் 7,888 பேருக்கும், தஞ்சையில் 8,340, விருதுநகரில் 13,683, ராமநாதபுரத்தில் 5,181 பேருக்கும், அரியலூர் 3,271 மற்றும் பெரம்பலூரில் 1,545 பேருக்கும், புதுக்கோட்டையில் 7,427 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 2,238 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.