சென்னை: சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 591 ஆக உயர்ந்தது.  அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 16,351 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் மருத்துவப் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் எந்தந்த மண்டலங்களில் எத்தனை பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை, 4,97,066 பேர் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிப்படைந்து உள்ளனர். இதுவரை 4,41,649 பேர் மருத்துவ சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

சென்னையில் அதிகபட்சமாக 978 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை  1,47,591 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னையில் நேற்று 12,362 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. கொரோனா வைரஸ் நோய் தொற்று கண்டறியப்பட்டவர்களில் 10,645 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இதுவரை கொரோனா தொற்றுக்கு மருத்துவ சிகிச்சைக்கு பெற்று குணம் அடைந்தவர்கள் 1 லட்சத்து 33 ஆயிரத்து 987 பேர்.

சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. சென்னையில் இதுவரை 2,959 பேர் கொரோனா வைரஸ் தாக்கி இறந்துள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 8, 307-ஆக உயர்ந்துள்ளது.

சமீபத்தில் சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண் ணிக்கை 900 கீழே குறைந்திருந்தது. ஆனால் மீண்டும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட வர்கள் எண்ணிக்கை 2 மண்டலங்களில் 1000ஐ தாண்டியுள்ளது

சென்னையின் 15 மண்டலங்களில் 10,645 பேர் கொரோன வைரஸ் நோய் தடுப்புக்கான மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். அம்பத்தூரில்  800 பேரும், கோடம்பாக்கத்தில் 1,178 பேரும், அண்ணா நகரில் 1,055 பேரும், வளசரவாக்கத்தில் 900 பேரும், அடையாறில் 793 பேரும் திரு.வி.க. நகரில் 777 பேரும் மணலியில் 133 பேரும் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.