கோரக்பூர்

கோரக்பூர் மருத்துவமனையில் மேலும் 13 குழந்தைகள் கடந்த 24 மணி நேரத்தில் மரணம் அடைந்துள்ளனர்.

கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கடந்த மாதம் பல குழந்தைகள் பரிதாப மரணம் அடைந்தது தெரிந்ததே.   அந்த மருத்துவமனையில் தற்போது நிலைமை சீராக உள்ளதாக சொல்லப்பட்டு வந்த போதிலும் இன்னும் குழந்தைகள் மரணம் ஒரு தொடர்கதையாகவே உள்ளது.

நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் 13 குழந்தைகள் மரணம் அடைந்ததாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.   அதில் 10 குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் மூன்று குழந்தைகள் குழந்தைகள் நல வார்டிலும் இறந்துள்ளனர்.

இந்த வருடம் மட்டும் இந்த மருத்துவமனையில் 1317 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளனர்.  அதிலும் இந்த மாதம் மட்டும் 32 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளனர்.  ஜனவரியில் 152, ஃபிப்ரவரியில் 122, மார்ச்சில் 159, ஏப்ரலில் 123, மேயில் 139, ஜூனில் 137, ஜூலையில் 128, மற்றும் அதிகபட்சமாக ஆகஸ்ட் மாதத்தில் 325 குழந்தைகள் இந்த வருடம் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை குழந்தைகள் மரணம் அடையாத ஒரே வார்டு மூளையழற்சி சிகிச்சை வார்டு மட்டுமே ஆகும்.