மகாராஷ்டிராவில் பயங்கரம்: கொரோனா சிகிச்சை மைய தீ விபத்தில் 13 பேர் பலி

மும்பை: கொரோனாவால் சூழப்பட்டுள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் பலியான சோகம் நிகழ்ந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா, பல்கார் மாவட்டம் வாசை பகுதியில் உள்ள விஜய் வல்லப் மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில்  இன்று  அதிகாலை பயங்கர  தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து, அங்கிருந்த பல நோயாளிகள் உடடினயாக அப்புறப்படுத்தப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு உடனடியாக மாற்றப்பட்டுள்ளனர்.தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த 13 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் ஏற்கனவே, நாசிக்கில் வாயு கசிவால் திடீரென ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதில் 24 பேர் உயிரிழிந்தது குறிப்பிடத்தக்கது.