வியட்நாம்: கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு

கடும் மழைப்பொழிவு காரணமாக வியட்நாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். பலர் காணாமல் போனதால் ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

flood

வியட்நாமில் கடந்த ஒருசில வாரமாக கடுமையான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் ஆங்காங்கே சிலச்சரிவு ஏற்பட்டது. ரிசார்ட் நகரமான நா தாராங் பகுதியில் ஏற்பட்ட நிலசரிவில் சிக்கி 13பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைப்பொழிவு மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலர் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்கும் பணியில் 600க்கும் மேற்பட்ட ராணு வீரர்கள் மற்றும் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக செய்தி வெளியிட்ட வியட்நாம் அரசு “ விரைவில் மீட்பு பணிகள் முடிந்து இயல்பு நிலை திரும்பும். மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்” என தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வெள்ளம் மற்றும் புயல் காரணமாக வியட்நாமில் ஏற்பட்டும் நிலச்சரிவில் சிக்கி 100க்கும் அதிகமானோர் உயிரிழப்பது குறிப்பிடத்தக்கது.