சிம்லா அருகே ஜீப் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 13 பேர் பலி

சிம்லா:

சுற்றுலா பிரதேசமான  சிம்லாவில் ஜீப் ஒன்று  பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பெண்கள் உள்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது பெரும்  சோகத்தை  ஏற்படுத்தி உள்ளது.

மலை பகுதியில் பயணிகளை ஏற்றி வந்த ஜீப் எதிர்பாராத விதமாக சாலை அருகே இருந்த பள்ளத்தாக்கில் இறங்கி கவிழ்ந்தது. இந்த விபத்து, இமாச்சல பிரதேசம் மாநிலம் சிம்லா  அருகே உள்ள ஸ்னைல் என்ற பகுதி நடைபெற்றது.

இதைக்கண்ட அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துவிட்டு மீட்பு பணிகளில் இறங்கினர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 4 பெண்கள் உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்