ஏ.என் 32 ரக விமான விபத்தில் 13 பேரும் உயிரிழப்பு! விமானப்படை அறிவிப்பு

இம்பால்:

மாயமான ஏ.என் 32 ரக விமானப்படை விமானத்தின் பாகங்கள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அதில் பயணம் செய்த 13 பேரும் உயிரிழந்ததாக விமானப்படை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் ஒன்று கடந்த 3-ந்தேதி அசாமின் ஜோர்கட் விமானப்படை தளத்தில் இருந்து அண்டை மாநிலமான அருணாசல பிரதேசத்தின் மென்சுகா பகுதிக்கு   விமானப்படை அதிகாரிகள், வீரர்கள் என 13 பேருடன் புறப்பட்டது.

இந்த விமானம் கிளம்பிய அரை மணி நேரத்தில், அருணாசல பிரதேசத்தில் சீன எல்லையோரம் மாயமானது.  இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விமானத்தில் பயணித்த 13 பேர் கதி என்ன ஆனது என்பது தெரியாமலேயே மர்மம் நீடித்து வந்தது.

இந்த நிலையில், சுமார் 10 நாட்களுக்கு பிறகு  தற்போது விமானத்தின் உடைந்த பாகங்கள் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்டது. இதனால் விமானத்தின் பயனம் செய்தவர்களின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தன்ர. இந்த நிலையில்,  விமானத்தின் சிதறிய பாகங்களுடன் மனித சடலங்களும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக ஏ. என். 32-ல் பயணித்த யாரும் உயிர்பிழைக்கவில்லை என விமானப்படை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். இதுகுறித்து 13 பேரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து விட்டதாகவும் இந்திய விமானப் படை கூறியுள்ளது.