நீட்-2019: தமிழகத்தில் 7ஆயிரம் பேர் உள்பட 13 லட்சம் பேர் விண்ணப்பம்: இன்றே கடைசி?

--

டில்லி:

ருத்துவ படிப்பிற்கான நீட்  நுழைவு தேர்வுக்கு இதுவரை நாடு முழுவதும் இருந்து 13 லட்சம் மாணவ மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களில் 7000 பேர் தமிழகத்தை சேர்ந்த வர்கள்.

நீட் தேர்வுக்கான விண்ணப்பம் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 1ந்தேதி விண்ணப்ப பதிவு தொடங்கிய நிலையில், இன்றுடன் விண்ணப்ப பதிவு முடிவடைகிறது. இதற்கிடையில், விண்ணப்ப பதிவுக்கான கால அவகாசத்தை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க தேசிய தேர்வு வாரியத்துக்கு உச்சநீதி மன்றம் அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து தேசிய கல்வி வாரியம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை.  இந்த நிலையில்,  நீட் தேர்வுக்கு இதுவரை 13 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு இதுவரை அரசு பள்ளி மாணவர்கள் 7000 பேர் விண்ணப்பித்துள்ளனர்  என்று தமிழக கல்வித்துறை  தெரிவித்து உள்ளது.

புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க உச்சநீதி மன்றம் மேலும் ஒரு காலம் அவகாசம் வழங்க தேசிய கல்வி நிறுவனத்துக்கு உத்தரவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.