வைரமுத்து மீது 13+ பாலியல் குற்றசாட்டு இருக்கு ; சின்மயி…!

கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாகப் பாடகி சின்மயி குற்றச்சாட்டியதையடுத்து தொடர்ந்து சமூகவலைதளங்களில் பாலியல் கொடுமை குறித்து பேசி வருகிறார்.

சமீபத்தில் நெட்டிசன் ஒருவர், பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார். பெண்களுக்கான நியாயம் கிடைக்க எப்படி போராட வேண்டி இருக்கு என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த சின்மயி, ‘இது என்ன பிரமாதம், பாடலாசிரியர் வைரமுத்து மீது 13க்கும் மேற்பட்ட பெண்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். நான் அளித்த புகாரால் ராதாரவி என்னை டப்பிங் யூனியனிலிருந்து வெளியேற்றினார்

பாலிவுட் இசையமைப்பாளர் அனு மாலிக் பொதுஇடத்தில் வைத்தே 6 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பாடகர் கார்த்தி, சுவிட்சர்லாந்து பாடகியுடன் சேர்த்து 7 பெண்களிடம் அத்துமீறியுள்ளார். இவர்களின் வரிசையில் கைலாஷ் கெர், ரகு தீக்‌ஷித் என பலர் உள்ளனர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பாதுகாப்பை உறுதி செய்யாமல் மகளிர் தினம் கொண்டாடி என்ன பயன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.