சென்னை:

புதுக்கோட்டையில் 13 வாக்குச்சாவடிகள், ஊத்தங்கரையில் ஒரு வார்டுக்கும் மறுதேர்தல் வரும் 30ந்தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்த உள்ளது.

தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் 27 மற்றும் 30ந்தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதல்கட்ட தேர்தல் நேற்று (27ந்தேதி) சில பகுதிகளில் நடைபெற்றது. இதில் ஒருசில இடங்களில் வாக்குச்சீட்டில் முறைகேடு போன்ற காரணங்களால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

அதன்படி,  விராலிமலை அருகே சுயேச்சை வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்திற்கு பதிலாக மாற்று சின்னம் அச்சடிக்கப்பட்டிருந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து,  புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றியத்துகுட்பட்ட கோங்குடிப்பட்டி, பாக்குடி, பேராம்பூர் உள்ளிட்ட ஊராட்சிகளை உள்ளடக்கிய 15 வது வார்டுகளில் உள்ள 13 வாக்குச்சாவடி மையங்களில் மறு வாக்குப்பதிவு டிச. 30-ஆம் தேதிநடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 21 உறுப்பினர் தேர்வுக்கான தேர்தலில் சின்னமான கைப்பை சின்னத்திற்கு பதிலாக மகளிர் பணப்பை சின்னம் அச்சிடப்பட்டது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து வார்டு எண் 185, 186, 187, 188, 189, 190, 192, 194, 195 ஊராட்சி ஒன்றிய 21வது வார்டு கான டிசம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் ரத்து செய்யப்பட்டது.  அங்கு ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய வார்டு எண் 21 கான உறுப்பினர் பதவிக்கு மட்டும் மறுவாக்குப்பதிவு 30. 12. 2019 காலை 7 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என மாவட்ட தேர்தல் அலுவலர்  தெரிவித்துள்ளார்.