லக்னோ:

த்தரபிரதேசத்தில் பள்ளி வேன் மீது ரெயில் மோதியது இந்த விபத்தில் 11 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியானதாக கூறப்படுகிறது.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள குஷிநகர் பகுதியில் ஆளில்லா ரெயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது அந்த வழியாக வந்த ரெயில் பயங்கரமாக மோதி தள்ளியது.

இதில் விபத்தில் பள்ளி வேனில் இருந்த மாணவர்களில் 13 பேர் பரிதாபமாக உயரிழந்தனர். மேலும் 8 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று காலை சுமார் 20 மாணவர்களுடன் சென்ற அந்த பள்ளி வேன் விபத்துக்குள்ளாது. விபத்து காரணமாக மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அந்த பகுதி மக்கள் உடடினயாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவல் அறிந்த காவல்துறையினரும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு, காயமடைந்த மாணவர்களையும் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடை பெற்று வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த உ.பி. முதல்வர் ஆதித்யநாத்,விபத்தில் இறந்த மாணவர்களுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளார். இறந்த மாணவர்களின் குடும்பத்துக்கு  தலா 2லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.