வாஷிங்டன்: சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு டிரம்ப் நிர்வாகம் விதித்த கூடுதல் வரி, செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரும் நிலையில், சீனாவிலிருந்து 13% நிறுவனங்கள் வெளியேறும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக தான் பதவியேற்றதிலிருந்து, சீன இறக்குமதி பொருட்களுக்கு அதிக வரிவிதிக்கும் நடைமுறையைத் தொடங்கினார் டிரம்ப். அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கைகளால், உலகின் முதல் இரண்டு பெரிய பொருளாதாரங்களான அமெரிக்கா – சீனா இடையே வர்த்தக யுத்தம் தொடங்கியது.

“இந்த மோசமான நிலையை சீனர்களே தங்களுக்கு ஏற்படுத்திக் கொண்டார்கள். எனவே, 13% அளவிலான குறிப்பிட்ட நிறுவனங்கள், எதிர்வரும் குறுகிய காலத்தில் சீனாவைவிட்டு வெளியேறும். அதுவொரு பெரிய விஷயம்.

அப்படி நடக்கும்போது அந்த விஷயத்தைக் கேட்பதில் எனக்கு எந்த ஆச்சர்யமும் நிகழாது. அது இன்னும் அதிகரிக்கும் என்று நாம் நினைக்கிறேன். ஏனெனில், அந்நிறுவனங்களால் புதிய வரிவிதிப்பை சமாளிக்க முடியாது. அவர்களால் போட்டியிட முடியாது” என்றார் டிரம்ப்.