கணவரை கொலை செய்து செப்டிங் டேங்கினுள் புதைத்த மனைவி சவிதா

மும்பை,

ணவனை கொன்று, அவரது உடலை செப்டிங் டேங்குக்குள் போட்டிருந்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக்காதல் காரணமாக இந்த கொலை நடைபெற்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தமிழக்ததில்,  மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்குகளில் ஆட்டோ சங்கர் மீதான வழக்கு ஒன்றாகும். 1988_ம் ஆண்டுஆட்டோ சங்கர் என்பவன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தனது எதிரிகளையும், காதலிகளையும் கொலை செய்து,  `திகில்’ சினிமா படங்களில் வரும் காட்சி கள் போல 6 பேரை கொடூரமாக கொலை செய்து  அவரகளின் உடலை வீட்டு சுவற்றில் வைத்து பூசியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதுபோல, தனது கள்ளகாதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று 13 ஆண்டுகள் செப்டிக் டேங்கில் மறைத்து வைத்த’ ஆட்டோ சங்கரி’ மனைவியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகினறனர்.

மும்பை அருகே உள்ள தானே மாவட்டம் காந்திபாடா பகுதியில் விபச்சாரம் நடைபெறுவதாக வந்த தகவலை தொடர்ந்து நடைபெற்ற சோதனையின்போது, சில இளம்பெண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து,  அவர்களை விபசாரத்துக்கு ஈடுபடுத்தியதாக சவீதா பாரதி என்ற பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். அதையடுத்து,  அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினார். அப்போது, வீட்டின் வெளியே இருந்த செப்டிக் டேங்கில் அழுகிய நிலையில் எலும்புக்கூடாக சடலம் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதை மீட்ட போலீசார் அதுகுறித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, அந்த சடலம், சவீதாவின் கணவர் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசாரிடம் சவீதா கூறியதாவது,

கடந்த 2004ம் ஆண்டு ஷாதேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டதாகவும், தங்களுக்க இரண்டு குழந்தைகள்  இருப்பதாகவும் கூறி உள்ளார். மேலும், தனக்கும், கமலேஷ் என்வருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது வந்தது. இது தனது கணவருக்கு தெரிந்ததும் அவர் எங்களை கண்டித்தார்.

இதன் காரணமாக சம்பவத்தன்று தனது கணவர் கணவர் ஷாதேவ், குடிபோதையில் இருந்தபோது, அவரை தனது  கள்ள காதலனுடன் சேர்ந்து கல்லால் தாக்கி அடித்து கொன்று செப்டிக்டேங்கில் புதைத்துவிட்டதாகவும் கூறினார்.

மேலும், தனது தொழிலுக்கு எதிராக செயல்பட்ட 3 பேரை கொலை செய்துள்ளதாகவும் கூறி உள்ளார்.

அவர்களது உடலை தேடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. சவீதாவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து உள்ளனர்.

பெண் ஒருவரே ஆட்டோ சங்கர் போன்று கொலை செய்து உடலை மறைத்து வைத்திருப்பதை, அங்குள்ளவர்கள், மும்பையின் ‘ஆட்டோ சங்கரி’  என்று கூறுகின்றனர்.