ஐதராபாத்:

தீவிர இந்துத்துவா அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத், நாட்டில் உள்ள 130 கோடி மக்களும் இந்துக்கள்தான் என்று அதிரடியாக கூறினார்.

தெலுங்கனா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சாரூர்நகர் ஸ்டேடியத்தில் விஜய் சங்கல்ப் ஷிபீர் என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து 8,500 க்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் தொண்டர்கள்  பங்கேற்றனர். 3 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின்  2வது நாள் நிகர்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார்.

விழாவில் பேசிய மோகன்பகவத்,  இந்து சமூகம் தேசத்தை ஒன்றிணைக்க “இந்து வழியில்” தீர்வுகளைக் காண வல்லது என்றும்,  நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் இந்திய  இந்திய தாயின் மக்கள்தான், அவர்கள்  எந்த மொழி பேசினாலும், எந்த பிராந்தியத்தை சேர்ந்தவராக இருந்தாலும், எந்தவகை வழிபாட்டை கடைபிடித்தாலும் அல்லது எந்த வழிபாட்டிலும் நம்பிக்கை இல்லை என்றாலும் அவகள்  இந்துதான். அந்தவகையில் ஆர்.எஸ்.எஸ்.சை பொறுத்தவரை இந்தியாவின் 130 கோடி மக்களும் இந்து சமுதாயத்தினர்தான் என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர்,  புதிய குடியுரிமைச் சட்டம். தேசிய மக்கள்தொகை பதிவு (என்.பி.ஆர்) தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (என்.ஆர்.சி) போன்றவை குறித்து பேசியவர்,. தேசத்தை ஒன்றிணைக்க இந்து சமூகம் ஒரு “இந்து வழியில்” தீர்வுகளைக் காண வல்லது என்றார்.

நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் ‘சுதேசி சமாஜில்’  எழுதிய வார்த்தைகளை  குறிப்பிட்டு பேசியவர்,  “இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே சில உள்ளார்ந்த முரண்பாடுகள் இருந்தபோதிலும், தேசத்தை ஒன்றிணைக்க இந்து வழியில் தீர்வுகள் உள்ளது என்றும்,  இது இந்து சிந்தனை செயல்முறை, நமது கலாச்சார விழுமியங்கள் இந்து வாழ்க்கை முறையை வரையறுக்கின்றன’ என்று கூறினார்.

ஒரு இந்து யார் என்பதை தெளிவுபடுத்தி பேசிய மோகன் பகவத். “மதம் மற்றும் கலாச்சாரத்தைப் பொருட்படுத்தா மல், தேசியவாத உணர்வும், பாரதத்தின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் மதிக்கும் மக்கள் இந்துக்கள், மேலும் ஆர்எஸ்எஸ் நாட்டின் 130 கோடி மக்களை இந்துக்களாக கருதுகிறது. முழு சமூகமும் நம்முடையது, இதுபோன்ற ஒன்றுபட்ட சமுதாயத்தை உருவாக்குவதே சங்கத்தின் நோக்கமாகும் ” என்று சூளுரைத்தார்.

தேசத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் இந்தியாவின் பாராம்பரிய சிந்தனை என்றவர், இந்தியத் தாயின் மகன் ஒருவர், எந்த மொழி பேசுபவராக இருந்துலும், எந்தக் கடவுளை வழிபடுபவராக இருந்தாலும் அவரும் இந்துதான்

விஜய் சங்கல்பைப் பற்றி பேசிய பகவத், சுயம்சேவர்கள் தேசத்தின் வளர்ச்சி மற்றும் வெற்றிக்காக, எந்த சுயநல நோக்கமும் இல்லாமல், சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் சேவை செய்யும் போது எந்தவிதமான கடன், பெயர் அல்லது புகழ் பெறாமலும் செயல்படுகிறார்கள் என்று சுட்டிக்காட்டினார்.

“துரதிர்ஷ்டவசமாக உலகம் தமாசிக் மற்றும் ராஜசிக் சக்திகளால் நிறைந்துள்ளது; நமது பாரதீய கலாச்சாரம் மட்டுமே தர்ம விஜயத்தை அடைய வல்லது, இதுபோன்ற ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட இந்து சமூகம் உலகை ஒரு விஸ்வ குருவாக வழிநடத்த முடியும். சாத்விக் இயற்கையின் மக்கள் நேர்மறையானவர்கள் மற்றும் சவால்கள் மற்றும் தடைகளைப் பொருட்படுத்தாமல் ஆக்கபூர்வமான அணுகுமுறையுடன் சமூகத்திற்காக உழைக்கிறார்கள். இந்த முறையில் நாம் வெற்றியை அடையும்போது, ​​‘தர்ம விஜய்’ அடைகிறோம் ”என்று விளக்கினார்.

“ஆர்எஸ்எஸ்’ நோக்கம் ஒரு அமைப்பாக இருக்க வேண்டும், ஆனால் சரியான வகையான கலாச்சார மற்றும் சமூக விழுமியங்களுடன் சமூகத்தை ஒழுங்கமைத்து பலப்படுத்துவதாகும். மக்கள் எப்போதும் வளர்ச்சிக்கு சிறந்த தலைவர்களையும் அரசாங்கங்களையும் நோக்குகிறார்கள். ஆனால் அர்ப்பணிப்புடன் தேசத்தை நோக்கி செயல்படுவது எங்கள் பொறுப்பு.

இவ்வாறு அவர் பேசினார்.