1,300 பேருக்கு ஒரே தந்தை.. வதந்தி!!

மெரிக்காவில் வசிக்கும்  87 வயது முதியவருக்கு முறைத்தவறி 1,300 குழந்தைகள் பிறந்துள்ளதாக சமூகவலைதளங்களில்  வைரலாகி வரும்  பதிவு பொய்ச்செய்தி என்பது தெரியவந்துள்ளது.

சமூகவலைதளங்களில் பரவும் செய்தி இதுதான்:
”அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் உள்ள நாஷ்வில் பகுதியில் துப்பறியும் நிறுவனம் ஒன்று செயல்படுகிறது.  அந்த துப்பறியும் நிறுவனத்திடம்  2001 ஆம் ஆண்டு தங்கள் தந்தை யார் என்பதை கண்டுப்பிடித்து தருமாறு இரண்டு பேர் தனித்தனியாக கேட்டனர்.  இதைத் தொடர்ந்து துப்பறியும் நிறுவனம்  விசாரணையை தொடங்கியது. விசாரணை முடிவில்  தந்தையை கண்டுப்பிடித்து தருமாறு கோரிய இரண்டு பேரின் தந்தையும் ஒரே நபர் தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் 15 வருடங்கள் நடத்தப்பட்ட சோதனையில் இருவருக்கும் மட்டுமில்லை, நாஷ்வில் பகுதியில் 1300 பேருக்கு அதே நபர்  தான் தந்தை என்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.  டி.என்.ஏ பரிசோதனையில் இது. தெரிய வந்துள்ளது.

அந்த 1300 பேரின் தந்தைக்கு தற்போது 87 வயது.  ஓய்வுபெற்ற அஞ்சலக ஊழியர்.  இது குறித்து  முதியவர ,’நான் 1960களில் இளைஞன்.  அந்த காலகட்டத்தில் கருத்தடை குறித்து  விழிப்பு உணர்வு இல்லை. நான் மிக அழகாக நடிகனைப்போல இருப்பேன்.  பல பெண்கள் என்னை விரும்பினர். அதுதான் காரணம். இதற்காக நான் வெட்கப்படவில்லை’ என்று  கூறினார்”

–        இவ்வாறு அந்த சமூகவலைதள பதிவில்   குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் இந்த செய்தியில் வெளியாகி உள்ள புகைப்படம்,  மற்றும் என்று  ’Snopes’  நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது! இந்த நிறுவனம், செய்திகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதில் பிரபலமானது. ஆகவே சமூகவலைதளங்களில் வந்த செய்தி பொய் என்பது தெரியவந்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published.