13ஆயிரம் கோடி பிஎன்பி முறைகேடு: உச்சநீதி மன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

--

டில்லி:

ஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13ஆயிரம் கோடி அளவிலான  நிரவ் மோடியின் முறைகேடு குறித்து விசாரித்து வந்த சிபிஐ, இன்று உச்சநீதி மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வரும், வைர வியாபாரி நிரவ் மோடி பி.என்.பி வங்கியில் ரூ.13,000 கோடி கடன் பெற்று மோசடி செய்த விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாட்டையே உலுக்கிய இந்த முறைகேடு குறித்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கான்வில்கர், சந்திரசுத் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

கடந்த மாதம் நடைபெற்ற  விசாரணையின்போது, இந்த முறைகேடு குறித்த விசாரணை  உச்சநீதி மன்ற கண்காணிப்பில் நடைபெற வேண்டும் என்றும், நிர்வ் மோடியை இந்தியா வரவழைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் வழக்கறிஞர்  வழக்கறில், வினித் என்பவர் உச்சநீதி மன்றத்தில் கோரியிருந்தார்.

இதற்கு மத்திய அரசு வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும்,  இந்த முறைகேடு குறித்து சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. ஆகவே மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரினார்,

இந்த நிலையில், 13 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு வழக்கில்,  சிபிஐ இன்று உச்சநீதி மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடிக்கு காரணமாக, ரிசர்வ் வங்கி வெளிப்படையான தணிக்கையை மேற்கொள்ளாமல் போனது தான்  காரணம் என்று மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் கே.வி.சவுத்ரி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.