வேலூர்:

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள வேலுர் மக்களவை தொகுதியில் 133 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என தேர்தல் அலுவலரான மாவட்ட கலெக்டர்  சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தின் தந்தை துரை முருகனின் வீடு,  மற்றும் நிறுவனங்கள், அவர்களது நண்பர்கள், உறவினர்களில் நடைபெற்ற ரெய்டின்போது, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது உறுதியான நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டது..

அதையடுத்து, ஆகஸ்டு 5ந்தேதி, வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் அலுவலும் வேலூர் மாவட்ட ஆட்சியருமான சண்முக சுந்தரம் , தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வருவதாக தெரிவித்து உள்ளார்.

அத்துடன்  தேர்தலை கண்காணிக்க 18 பறக்கும் படைகள், நிலைக்குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும், தேர்தல் அமைதியான முறையில் நடைபெறும் வகையில், இன்று மாலை 4மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்து உள்ளார்.