Random image

காங்கிரஸ் கட்சியின் 134வது ஸ்தாபன தினம்: கட்சி தொண்டர்களை வாழ்த்தி ராகுல்காந்தி டிவிட்

டில்லி:

காங்கிரஸ் கட்சியின் 134வது ஸ்தாபன தினம் இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி தொண்டர்களை வாழ்த்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி தனதுகருத்தை டிவிட்டர் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

அதில், காங்கிரஸ் கட்சியை கட்டியெழுப்ப உதவிய மில்லியன் கணக்கான காங்கிரஸ் தொழிலாளர்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோரின் தன்னலமற்ற சேவை மற்றும் பங்களிப்புகளை நாம் கொண்டாடுவோம்.

இந்த உற்சாகமான ஹீரோக்களுக்கு நாம் நன்றி மற்றும் மரியாதை செலுத்த  கடமைப்பட்டு உள்ளோம்.

இவ்வாறு காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், நிர்வாகிகள்,  தொண்டர்களை பெருமைப்படுத்தி  உள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து, காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அசோக் கெலாட், குலாம் நபி ஆசாத் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அந்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.