இந்தோனேசியாவில் உயரும் கொரோனா பலி: 136 மருத்துவர்கள் உயிரிழப்பு

ஜகார்த்தா: இந்தோனேசியா நாட்டில் கொரோனா தொற்றுக்கு மேலும் 9  மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்தோனேசியா நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதுவரை அங்கு 136 மருத்துவர்கள் பலியாகி உள்ளதாக அந்நாட்டு மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த சங்கத்தின் துணைத் தலைவர் அரி குசுமா கூறியதாவது: சுகாதார சேவை புரிபவர்களுக்கு இது ஒரு நெருக்கடியான நிலைமை.  மருத்துவ பணியாளர்களின் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது மேலும் கவலை அளிக்கும் விஷயமாகும் என்றார்.

பலியான பெரும்பாலான மருத்துவர்கள் கிழக்கு ஜாவா, வட சுமத்ரா, ஜகார்த்தா ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.