கொரோனா அச்சத்தால் கோவை சிறையில் 136 விசாரணைக் கைதிகள் விடுதலை…

கோவை

கொரோனா அச்சம் காரணமாக கோவை சிறையில் 131 ஆண்கள், 5 பெண்கள்  உட்பட 136 விசாரணைக் கைதிகள் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில்  இந்நோய்ப் பரவுவதைத் தடுக்க சிறையில் 2 சிறப்பு வார்டுகள் திறக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை மத்திய  சிறைத்துறை அதிகாரி கிருஷ்ணராஜ் அவர்கள், “சிறைக் கு புதிதாக வரும் கைதிகளின் நோய்த் தொற்றை  என்பதை  கண்டறியவும், சிறையில் உள்ள கைதிகளை பரிசோதிக்கவும் என இரு சிறப்பு வார்டுகள் திறக்கப்பட்டுள்ளன. கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டோரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்ல உரிய ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன” என்றார்.

கோவை மத்திய சிறையில் 1800 ஆண் கைதிகளும், 75 பெண் கைதிகளும் உள்ளனர். விடுதலை செய்யப்பட்ட விசாரணைக் கைதிகளில் ஹீலர் பாஸ்கரும் அடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.