einstein

மார்ச் 14, 1879 அன்று, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அல்ம், ஜெர்மனியில் பிறந்தார். அவர் 20 ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான விஞ்ஞானி; 1921ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்று வரலாறு காணாத E = MC^ 2 என்ற சமன்பாடைக் கண்டுபிடித்தார்.
ஐன்ஸ்டீன் ஒரு தத்துவார்த்த இயற்பியலாளர்; அவர் கணித மாதிரிகளைக் கொண்டு பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்று எழிய வகையில் புரிந்து கொள்ள உதவியுள்ளார் . அவர் சிறு வயதிலிருந்தே புவி ஈர்ப்பு, காந்த சக்தி, மின்சாரம் போன்ற அறிவியல் நுணுக்கங்களின் தொடர்பை காண மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளார்.
ஐன்ஸ்டீன் ஒரு விஞ்ஞானி மட்டுமல்ல, அவர் ஒரு மனிதாபிமானமிக்க நல்ல மனிதரும் கூட. அவர் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மற்றும் ஐரோப்பாவில் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர். மேலும் அவர் மாணவர்களின் கல்விக்காகவும் மிகவும் பாடுபட்டவராவார்.