தமிழகத்தில் வாக்காளர் பெயர் சேர்க்க 13,73,595 பேர் விண்ணப்பம்: தேர்தல் ஆணையர் தகவல்

சென்னை:

மிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 13,73,595 பேர் விண்ணப்பித்துள்ளனர்  என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர்  சத்ய பிரதா சாஹூ கூறி உள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலை கருத்தில்கொண்டு, 2018 ஜனவரி 4ந்தேதி வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும் என்று  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி  சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார்.

2018ம் ஆண்டு நாடு முழுவதும்  நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு, வாக்காளர் பட்டியரில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் செய்வது தொடர்பாக முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

கடந்த செப்டம்பர் 9 மற்றும் 23, அக்டோபர் 7, 14 போன்ற தேதிகளின் வாக்காளர் சேர்ப்பு முகாம்கள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிதாக 13,73,595 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும்,  அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 99,458 பேர் விண்ணப்பித்துள்ளனர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ கூறி உள்ளார்.