என்கவுண்ட்டர் டிஎஸ்பி வெள்ளத்துரை உள்பட தமிழகத்தில் 138 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்!

சென்னை:

ன்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்  டிஎஸ்பி வெள்ளத்துரை உள்பட தமிழகத்தில் 138 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில்  சென்னையில் பணியாற்றி வந்த உதவி ஆணையர்கள் 33 பேரும் அடங்குவர்.

பாராளுமன்ற தேர்தலையொட்டி 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றி வரும் அதிகாரிகளை இடம் மாற்ற தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது. இது வழக்கமான நடைமுறை. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் நடை பெற்று வருகிறது.

89 டி.எஸ்.பி.க்கள் மற்றும் 16 கூடுதல் டி.எஸ்.பி.க்களை இடமாற்றம் செய்து காவல்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இவர்களில் என்கவுண்டர் ஸ்பெஷலிட் வெள்ளத்துரையும் ஒருவர்.  அதுபோல சென்னையில் பணியாற்றி வரும் உதவி ஆணையர்கள் 33 பேரையும் இடமாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

உள்பட தமிழகத்தில் 138 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்!