விஜயவாடாவில் ரூ. 2 கோடி மதிப்புள்ள கஞ்சா   பறிமுதல்

விஜயவாடா:

விஜயவாடாவில் 2 கோடி மதிப்புள்ள கஞ்சா பொருட்களை வருவாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் விஜவாடாவில் போதைபொருட்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக உளவுத்துறை மூலம் காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதையடுத்து விஜயவாடா – பென்ஸ் வட்டம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

அபோது டாடா கனரக வாகனத்தில் சோதனை மேற்கொண்ட போது அந்த வாகனத்தில் கஞ்சா போதைப்பொருட்கள் கடத்தி செல்வது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த வாகனத்தையும் கஞ்சா பொருட்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அவை  சரபாவரம் கிராமத்தில் இருந்து  ஐதராபாத்திற்கு கொண்டு செல்வது தெரியவந்துள்ளது. இதன் மதிப்பு சுமார் 2 கோடி என கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.