அடுத்த வருடம் பெங்களூரு சர்வதேச விழாவை நடத்த கர்நாடகா முதலமைச்சர் ஒப்புதல்

பெங்களுரூ:
ர்நாடக முதலமைச்சர் பி எஸ் எடியூரப்பா 13வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவை ஏற்பாடு செய்ய நேற்று முறைசாரா ஒப்புதல் அளித்துள்ளார்.
கர்நாடகா சலனசித்ரா அகாடமி தலைவர் சுனில் புராணிக் தலைமையிலான தூதுக்குழு முதலமைச்சர் எடியூரப்பாவை அழைத்து நகரத்தில் நடைபெற உள்ள 13வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா ஏற்பாடுகள் குறித்து விளக்கமளித்தது.
முதலமைச்சரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுனில் புராணிக் தெரிவித்துள்ளதாவது: 13வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவை அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் நடத்த அகாடமி முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவிற்கு, சர்வதேச அங்கீகாரம் பெற ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நாங்கள் முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளோம், கடந்த 10 ஆண்டுகளாக பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவிற்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற அகாடமி தனது சிறந்த முயற்சியை மேற்கொண்டு வருவதாகவும் சுனில் புராணிக் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் நடத்தப்படும் 5000 சர்வதேச திரைப்பட விழாக்களில் 45 பேருக்கு மட்டுமே இதுவரை சர்வதேச அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.