13வது உச்சி மாநாடு: பிரதமர் மோடி 28-ம் தேதி ஜப்பான் பயணம்

டில்லி:

ந்தியா ஜப்பான் இடையே நடைபெற உள்ள  13-வது உச்சி மாநாடில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் 28-ம் தேதி ஜப்பான் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இந்தியா வந்திருந்தார்.

இந்த நிலையில், இந்த ஆண்டு ஜப்பானில் நடைபெறும் 13-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி வரும் 28-ம் தேதி டோக்கியோ செல்கிறார்.

இநத மாநாட்டில் இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்தும் வகையில்  இருநாடுகளின் பிரதமர்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்று ஆலோசனை நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற மோடி, தற்போது 5வது முறையாக இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதுடன், 12-வது முறையாக  ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே-வை சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.