இன்று: எம்.ஜி.ஆருக்கு எம்.எஸ்.வியை  பிடித்துப்போக காரணம்..

download (7)

எம்.ஜி.ஆர் நடித்த “ஜெனோவா” தான் எஸ்.வி.யின் முதல் படம்.  எம்.ஜி.ஆருடன், பி.எஸ்.சரோஜா, பி.எஸ்.வீரப்பா நடிப்பில், எஃப். நாகூர் இயக்கத்தில் அப்படம் உருவானது.  ஆலப்புழாவைச் சேர்ந்த ஈஷப்பன் அதன் தயாரிப்பாளர்.

எம்.எஸ்.வி. அப்போது புதிய இசையமைப்பாளர் என்பதால் முதலில் அவரை மாற்றும்படி கூறினார்  எம்.ஜி.ஆர். பிறகு,  எம்.எஸ்.வி.யின் பாடல்களைக் கேட்டுவிட்டு அவரை ஏற்றுக்கொண்டார்.

அதற்குக் காரணம் எம்.எஸ்.வி.யின் திறமை மட்டுமல்ல, அவரது எளிமை, பணிவு போன்ற நற்குணங்களும் தான்.

எம்.ஜி.ஆர் 4 மணிக்கு வரச் சொன்னால் 3 மணிக்கே தாயார் வந்துவிடுவார் எஸ். எஸ்.வி.

ஒரு மெட்டுக்கு பத்து மெட்டு போட்டுக் காட்டுவார்.

அதெல்லாம் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துப் போனது. “ஜெனோவா’ வில் தொடங்கிய அவர்களது நட்பு  “மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’ வரை நீடித்தது.

எம்.ஜி.ஆரிடம் மட்டுமல்ல.. அனைவரிடமும் அன்போடும், பணிவோடும் பழகுவார். புதிய இயக்குநர், தயாரிப்பாளர் என்றாலும், ஒன்றுக்கு பத்து மெட்டு போட்டுக்காண்பிப்பார்.

திரையுலகில் நுழையும் பலர் ஆரம்ப காலத்தில் அனைவரிடமும் அதீத பணிவுடன் நடந்துகொள்வார்கள். பிறகு கர்வம் தலைக்கேறி, யாரையும் மதிக்க மாட்டார்கள்.

ஆனால், சிறந்த இசை அமைப்பாளராக மட்டுமின்றி நல்ல மனிதராகவும் வாழ்ந்த எம்.எஸ்.வியின் நினைவு தினம் இன்று.

கார்ட்டூன் கேலரி