சென்னை: தமிழகத்தில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. சென்னையில் தொற்று பாதிப்பு கடந்த ஒரு வாரமாக குறைந்து வந்த நிலையில், இன்று மீண்டும் ஆயிரத்தை தாண்டி உள்ளது.

தமிழகத்தில் இன்று 5,890 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக 3,26,245 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 5,556 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை  2,67,015 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,187 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால், தற்போது வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,14,260 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,514 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட் டுள்ளனர்.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் விவரம்:

சென்னையில் 1லட்சத்து 14ஆயிரத்து 260பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 8,274 பேருக்கும், திண்டுக்கல்லில் 4,524 பேருக்கும் திருநெல்வேலியில் 7,229 பேருக்கும், ஈரோட்டில் 1,334, திருச்சியில் 5,654 பேருக்கும், நாமக்கல் 1,144 மற்றும் ராணிப்பேட்டை 7,963, செங்கல்பட்டு 20,080, மதுரை 12,561, கரூர் 939, தேனி 9,489 மற்றும் திருவள்ளூரில் 18,958 பேருக்கு, தூத்துக்குடியில் 9,790, விழுப்புரத்தில் 5,033 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 1,552 பேருக்கும், திருவண்ணாமலையில் 8,514, தருமபுரியில் 969 பேருக்கும், திருப்பூரில் 1,431, கடலூர் 6,165, மற்றும் சேலத்தில் 5,537, திருவாரூரில் 2,202, நாகப்பட்டினம் 1,422, திருப்பத்தூர் 1,932, கன்னியாகுமரியில் 7,178 மற்றும் காஞ்சிபுரத்தில் 13,409 பேருக்கும், சிவகங்கை 3,271 மற்றும் வேலூரில் 8,078 பேருக்கும், நீலகிரியில் 1,010 பேருக்கும், தென்காசி 3,725, கள்ளக்குறிச்சியில் 4,776 பேருக்கும், தஞ்சையில் 4,652, விருதுநகரில் 10,938, ராமநாதபுரத்தில் 3,898 பேருக்கும், அரியலூர் 1,642 மற்றும் பெரம்பலூரில் 863 பேருக்கும், புதுக்கோட்டையில் 3,818 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு

சென்னை-1,187 திருவள்ளூர்-495 செங்கல்பட்டு- 437 கோவை-385 தேனி-367 காஞ்சிபுரம்- 315 கடலூர்-221 சேலம்-191 ராணிப்பேட்டை-178 வேலூர்-178 புதுக்கோட்டை-155 திண்டுக்கல்-138 குமரி-128 ஈரோடு-128 விழுப்புரம்-127 நெல்லை-117 விருதுநகர்-90, திருச்சி-106 தென்காசி-93 தஞ்சை-88 தி.மலை-81 சிவகங்கை-70 அரியலூர் -69 திருப்பத்தூர்-63 தூத்துக்குடி-60 ராமநாதபுரம்- 57 திருவாரூர்- 56 திருப்பூர்-53 மதுரை-46 தர்மபுரி -39 நாகை-34 நாமக்கல்-30 க.குறிச்சி-30 பெரம்பலூர்-24 நீலகிரி – 18 கரூர்-14 கிருஷ்ணகிரி-12