நியூயார்க்:

அமெரிக்காவின் டெக்சாஸ், ஆர்கன்சாஸ், மிசிசிபி, மிசவுரி, ஆக்லஹோமா ஆகிய மாகாணங்களில் நேற்று முன்தினம் பயங்கரமான சூறாவளி வீசியது. அப்போது பலத்த மழையும் பொழிந்தது.

 

மணிக்கு 110 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று சுழன்று வீசியது. இதில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஆயிரக்கணக்கான மரங்களின் கிளைகள் முறிந்து வீடு, வாகனங்கள் மீது விழுந்தது.

பல இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. 3 முறை பலத்த சூறாவளி வீசியதை அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

ஆர்கன்சாஸ், மிசவுரி, மிசிசிபி மாகாணங்களில் வீடுகள் மீது மரங்கள் விழுந்ததில் 3 பேர் பலியாயினர். ஒரு குழந்தை உள்பட 3 பேர் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டு இறந்தனர். மூதாட்டி ஒருவர் காருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

இந்த சூறாவளிக்கு இதுவரை 14 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சூறாவளியின் போது மின் கம்பங்கள் சாய்ந்ததால் 2 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளில் இருளில் மூழ்கியுள்ளன.