உத்தரகாண்ட் : பேருந்து விபத்தில் 14 பேர் மரணம்

--

சூர்யதார், உத்தரகாண்ட்

த்தரகாண்ட் மாநிலத்தில் அரசு பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்ததில் 14 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த மாநிலம் உத்தரகாண்ட் ஆகும்.  இமயமலையில் அமைந்துள்ள இந்த மாநிலத்தில் இன்று காலை அரசு பேருந்து ஒன்று ரிஷிகேஷ் – கங்கோத்ரி சலையில் சென்றுக் கொண்டிருந்தது.    உத்தர காசியில் இருந்து ஹரித்வார் செல்லும் இந்த பேருந்து திக்ரி மாவட்டம் சூர்யதார் அருகே ஓட்டுனரின் காட்டுப்பாட்டை இழந்தது.

அதனால் அருகிலிருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து கீழே உருண்டது.  பேருந்தில் பயணம் செய்துக் கொண்டிருந்த பயணிகளில் 14 பேர் அந்த இடத்திலேயே மரணம் அடைந்தனர்.      சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்த பேரிடர் மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர்.   இதுவரை சுமார் 18 பேர் காயத்துடன் அடைந்துள்ளனர்.  அவர்களில் 6 பேர் மிகவும் கவலைக்கிடமாக உள்ளனர்.

மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இந்த பேருந்து விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சமும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50000 நிதி உதவியும் அளிக்க அம்மாநில முதல்வர் ஆணை இட்டுள்ளார்.   விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.