சென்னை:
2021 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்துக்கு மேலும் 14 பயணிகள் ரயில்  இயக்க தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளது.

இந்திய ரயில்வே நேர குழுவின் 2020-21ம் ஆண்டிற்கான ஆலோசனைப்படி தமிழ்நாடு மற்றும் கேரளாவில் 14 புதிய ரயில்களை அறிமுகப்படுத்தவும், 12 ரயில்களை நீட்டிக்கவும் தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் சென்னை, மதுரை, சேலம், திருச்சி, திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு என மொத்தம் 14 ரயில்களை அறிமுகப்படுத்தவும், 12 ரயில்களை விரிவுபடுத்தவும் முன்மொழியப்பட்டுள்ளது.  ரயில்வே நேர அட்டவணையில் மாற்றங்களைச் செய்ய  ஐஆர்சிடிசி  பரிந்துரை செய்துள்ளது.
மேலும், சென்னை – திருப்பதி தினசரி எக்ஸ்பிரஸ் ரயில், தாம்பரம் – விசாகப்பட்டினம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ஆகியவற்றை அறிமுகப்படுத்த சென்னை பிரிவு பரிந்துரைத்துள்ளது.
2020-21 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்டுள்ள புதிய ரயில்கள் விவரம்..
1. சென்னை – திருப்பதி தினசரி எக்ஸ்பிரஸ்
2. தாம்பரம் – விசாகப்பட்டினம் வாராந்திர ரயில்
3. திருநெல்வேலி – கோயம்புத்தூர் தினசரி எக்ஸ்பிரஸ்
4. ராமேஸ்வரம் – பாலக்காடு தினசரி எக்ஸ்பிரஸ்
5. திண்டுக்கல் – பாலக்காடு தினசரி எக்ஸ்பிரஸ்
6. கோயம்புத்தூர் – ராமேஸ்வரம்  எக்ஸ்பிரஸ்
7. கோயம்புத்தூர் – பெங்களூரு  எக்ஸ்பிரஸ்
8. திருச்சி – கரூர், சேலம் மற்றும் ஓசூர் வழியாக பெங்களூரு
9. திருச்சி – பயையப்பனஹள்ளி இரு வார எக்ஸ்பிரஸ்
10.தாம்பரம் – காரைக்குடி தினசரி எக்ஸ்பிரஸ்
11. திருச்சி – மும்பை வாராந்திர எக்ஸ்பிரஸ்
12. திருவாரூர் – காரைகுடி பயணிகள் ரயில்
13. கொச்சுவேலி – கோயம்புத்தூர் அந்தோடயா வாராந்திர எக்ஸ்பிரஸ்
14. எர்ணாகுளம் – வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் வாராந்திர எக்ஸ்பிரஸ்.