கள்ளக்குறிச்சியில் 14 போலீசாருக்கு கொரோனா… காவல்நிலையம் மூடல்…

கள்ளக்குறிச்சி:

ள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த  14 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், காவல்நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை  470 பேர் கொரேனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று மட்டும்  25 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை நோய் தொற்றில் இருந்து 325 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில், இன்று  கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் உள்பட 14 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, கள்ளக்குறிச்சி காவல் நிலையம் மூடப்பட்டது.காவல்நிலைய வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.