சென்னை:

மிழகத்தில் ரூ.12.76 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள  14 சேமிப்பு கிடங்குகளை  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார்.

தலைமைச் செயலகத்தில், இன்று நடைபெற்ற விழாவில் காணொளி காட்சி மூலம் 14 சேமிப்பு கிடங்குகளையும் திறந்து வைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக வேலூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி வட்டம், பாச்சூர் கிராமத்தில் 2 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தலா 1000 டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்புக் கிடங்குகளை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், கடலூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 10 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 சேமிப்பு கிடங்குகளை திறந்து வைத்தார்.

உணவு பாதுகாப்பின் அங்கங்களான சேமிப்பு, விற்பனை ஆகியவற்றில் முக்கிய பங்காற்றி வரும் சேமிப்புக் கிடங்குகளை அதிகரித்து உணவு தானியங்களை முறையாக சேமித்து வைக்கும் கிடங்குகளின் கொள்ளளவினை உயர்த்தும் வகையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக புதிதாக கூடுதல் கிடங்குகள் கட்டப்படும் என்று புரட்சித் தலைவி அம்மா சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார்.

அந்த அறிவிப்பிற்கிணங்க, வேலூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி வட்டம், பாச்சூர் கிராமத்தில் 2 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தலா 1000 டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்புக் கிடங்குகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், கொட்டாரம் கிராமத்தில் 2 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தலா 1000 டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்புக் கிடங்குகள்;

மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டம், இடையப்பட்டி கிராமத்தில் 2 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தலா 1000 டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்புக் கிடங்குகள்; திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், முத்தூர் கிராமத்தில் 4 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மொத்தம் 10,000 டன் கொள்ளளவு கொண்ட 8 சேமிப்புக் கிடங்குகள்;

என மொத்தம், 12 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 14 சேமிப்புக் கிடங்குகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.