14 வயது சிறுமி வன்புணர்வு: பாஜக ஆதரவு திரிபுரா தொழிலதிபர் கைது

அகர்தலா:

நாடு முழுவதும் குழந்தைகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், திரிபுராவில்  14 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக பிரபல பாஜ ஆதரவு  தொழிலதிபருமான  மனோஜ் கோஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

திரிபுராவின்  டெலிஅமுரா கோவாய் மாவட்டத்தில் உள்ள ( Teliamura in Khowai district) பாரதியஜனதா கட்சி ஆதரவு தொழிலதிபரான 54 வயதான மனோஜ் கோஷ் , தனது சம்ப்ளாய் பகுதியில் உள்ள  பண்ணை வீட்டில் வேலை செய்து வந்த 14 வயது சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ளார்.

இந்த சம்ப்ளாப் பன்னை வீடு அகர்தலாவில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு வேலை செய்து வந்த 14 வயது சிறுமியை கடந்த பிப்ரவரி மாதம் முதல் 4 முறை பாலியல் தொல்லை வன்புணர்வு செய்து வந்துள்ளார்.

தொழிலதிபரின் கொடுமை தாங்காமல்  அந்த பண்ணை வீட்டில் இருந்து தப்பி வந்த சிறுமி, அருகிலுள்ள பிஸ்ஹல்கார்க் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அப்போது, இதுகுறித்து வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியதாகவும், கடந்த பிப்ரவரி 11ந்தேதி முதன்முறையாக தான் பலாத்காரப் படுத்தப்பட்டேன் என்றும் இதுவரை 4 முறை தன்னை அவர் வண்புணர்வு செய்துள்ளதாகவும் புகார் கொடுத்துள்ளார்.

அதைத்தொடர்ந்து காவல்துறையினர் தொழிலதிபர் மனோஜ் கோஷ் மீது போஸ்கோ சட்டத்தின்மூலம் கைது செய்யப்பட்டு கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும் அந்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பபட்டுள்ளதாகவும் காவல்துறை கண்காணிப்பாளர் கூறி உள்ளார்.இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் மனோஜ் கோஷ் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. மேலும், அகில் பாரத் அகண்ட விகாஸ் பரிஷத் என்ற அமைப்பின் தலைவராக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் புதிய அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், பாஜக ஆதரவு தொழிலதிபர் ஒருவர் வன்புணர்வு செய்து கொடுமை படுத்திய தகவல் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.