யோகா, நீச்சலில் உலக சாதனை – 14 வயதில் டாக்டர் பட்டம் பெற்ற சிறுமி!

யோகா மற்றும் நீச்சலில் பல்வேறு உலக சாதனைகளை நிகழ்த்திய 14வயது சிறுமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. சிறுமியின் சாதனையை பாராட்டி வேலூரில் உள்ள பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

14yrs

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த காத்திகேயன் மற்றும் தேவிப்பிரியா தம்பதியின் மகள் பிரிஷா. 14வயதான இவர் யோகாசனங்கள் செய்வதிலும், நீச்சல் பயிற்சிலும் சிறந்து விளங்கியதுடன் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறார். மாவட்டத்தில் ஆரம்பித்து மாநிலம், தேசியம் மற்றும் உலகளவில் பல சாதனைகளை பிரிஷா நிகழ்த்தியுள்ளார்.

சிறு வயதில் பல சாதனைகளை புரிந்து வரும் பிரிஷாவை பாராட்டி வேலூரில் உள்ள யுனிவர்சிட்டி ஆப் நியூஜெருசலேம் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. ஓய்வுப்பெற்ற நீதிபதி சாமிதுரை தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரிஷா டாக்டர் பட்டத்தை பெற்றுக் கொண்டார்.