டெல்லி:

லைநகர் டெல்லியில் காற்று மாசு காரணமாக மக்கள் சுவாசிக்கவே திணறி வருகின்றனர்.  காற்று மாசில் சிக்சி தத்தளித்து வரும் நிலையில், அங்குள்ள மத்தியஅரசு அலுவலகங்களுக்கு ஏர்பியூரிஃபையர் வாங்கி உபயோகப்படுத்தப்பட்டு வரும் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த  2014ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை  வரை மத்திய அரசு அலுவலகங்களுக்கு 140 ஏர் பியூரிஃபையர்கள்  ரூ .3.6 மில்லியன் மதிப்பிள் வாங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

காற்று மாசு பாதிப்பில் இருந்து தப்பிக்கும் வகையில் மத்தியஅரசு அலுவலகங்களுக்கு காற்று சுத்திகரிப்பான் எனப்படும் ஏர் பியூரிஃபையர் வாங்கப்பட்டு, உபயோகப்படுத்தப்பட்டு வருவதாகவும்,  2014ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை சுமார் 140 காற்று சுத்திகரிப்பான்கள் வாங்கப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதில், 24 காற்று சுத்திகரிப்பான்கள்  பிரதமர் அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், மற்றவைகள்,  பொருளாதார திட்டமிடல் சிந்தனைக் குழுவான நிதி ஆயோக் மற்றும் சுகாதாரம், விவசாயம், சுற்றுலா, வீட்டு விவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் அமைச்சகங்களில் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

வெளியாகி உள்ள டேட்டாக்களின் படி, கடந்த மூன்று ஆண்டுகளில் 44 சாதனங்களை வாங்க உள்துறை அமைச்சகம் சுமார் $ 20,000 செலவிட்டது. பிரதமர் அலுவலகத்தில் நிறுவப்பட்ட 25 காற்று சுத்திகரிப்பாளர்கள் சுமார், 000 11,000 செலவானதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.